ஜமா ஆத் போதனைக்கு வந்த மூன்று இளைஞர்கள் கடலில் முழ்கி பலி

(ihzana fareed)

திருகோணமலை, மூதூர், ஹபீப் நகர் கடலில் நீராடச் சென்ற இளைஞர்கள் மூவர் நேற்று  (23) பிற்பகல் 1.30 மணியளவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.


 திஹாரிய கலகெடிஹேன, அலி ஜின்னா மாவத்தையைச் சேர்ந்த எம்.உகாஸ் (19 வயது) எஸ்.இக்ராம் (19 வயது) மற்றும் எம்.அப்துல்லாஹ் (16 வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர் 

மூதூர் பிரதேசத்துக்கு ஜமா அத் போதனைக்காக வந்திருந்த நிலையிலே​யே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Comments