யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரம்
திருகோணமலை வெருகல் பிரதேச பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த கால யுத்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட 8 பயனாளிகளுக்கு வியாழக்கிழமை (26) தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதாக வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார் .
வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் பிரதேச செயல கேட்போர் கூடத்தில் வைத்து இவ் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.


Comments
Post a Comment