கோத்தபாயவிடம் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை!

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் கடந்த வெள்ளிக்கிழமை (20) குற்றவியல் விசாரணைகள் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து கோத்தபாயவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சரத் பொன்சேகாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொலையுடன் தொடர்புடைய முக்கிய பல தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Comments