நாட்டில் இன்னும் நிரந்தர சமாதானம் ஏற்படவில்லை: சந்திரிக்கா
யுத்தம் முடிவடைந்து எட்டாவது வருடத்தை எட்டுகின்ற போதிலும் நாட்டில் இன்னும் நிரந்தர சமாதானம் ஏற்படவில்லையென தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.
வட மாகாண மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அங்கு நிலவும் சூழ்நிலை குறித்த முழுமையான அறிவைப் பெற்றுக்கொள்ளாத நிலையிலேயே அங்குள்ள விடயங்கள் குறித்து தென் பகுதியில் கருத்துக்கள் பரிமாறப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர், நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வர இன்னும் உழைக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment