பிக்குகளாக்கப்படவிருந்த மேலும் இரு முஸ்லிம் சிறுவர்கள் விடுவிப்பு

-H.Ahmed                                                                                 file 

ஏழு வயதான முஸ்லிம் சிறுவன் பௌத்த துறவியாக்கத் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக மில்லனே சிரியலங்க தேரர் தகவல் வெளியிட்டிருந்த நிலையில் மேலும் இரு 12 மற்றும் 13 வயது முஸ்லிம் சிறுவர்கள் இவ்வாறு ஒப்படைக்கப்படுவது மேமன் சங்கத்தின் முயற்சியால் தடுக்கப்பட்டுள்ளது.

லெபனிய தந்தையினால் கைவிடப்பட்ட நிலையில் வறுமையில் வாடிய ரத்மலானையில் வசித்து வரும் தாய், குழந்தைகளைப் பாராமரிக்க முடியாது இம்முடிவை எட்டியிருந்த நிலையில் இது குறித்த தகவல் அறிந்து குறித்த சிறுவர்களைப் பொறுப்பேற்க முன் வந்துள்ளது மேமன் சங்கத்தின் ஆதரவற்றோர் காப்பகம். நாட்டின் பல்வேறு இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதோடு பெரும்பாலும் வறுமையால் வாடும் குடும்பங்களே இம்முடிவை எட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments