“மேன் பவர்' உதவித் தலைவரைக் காணவில்லை
(எம்.எப்.எம்.பஸீர்)
டெலிக்கொம் நிறுவனத்தின் மனித வள (மேன்பவர்) ஊழியர்கள் சங்கத்தின் உதவித் தலைவர் எம்.எஸ். மங்களவை காணவில்லை என அவரது மனைவி பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை அளித்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் உள்ள டெலிகொம் நிறுவனத்துக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டவர் கடந்த சனியன்று நள்ளிரவில் வீட்டுக்கு வருவதாக அறிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியதாகவும் எனினும் அவர் இதுவரை வீடு வந்து சேரவில்லை எனவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது.
இதேவேளை, தமது சங்கத்தின் உப தலைவர் பன்னிப்பிடியவிலுள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே, அவர் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அனைத்து இலங்கை தொலைத் தொடர்பு சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிமந்த விஜேசூரிய தெரிவித்தார்.
இந்நிலையில் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் டெலிக்கொம் நிறுவனத்தின் மனித வள (மேன்பவர்) ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment