முஸ்லிம் தூதுக்குழுவினரை சந்திப்பு: முஸ்லிம்களிடம் விளக்கமளிக்க தயார் -கோத்தா
முஸ்லிம்களுக்கு எதிராக தான் ஒருபோதும் செயற்படவில்லை என்றும் அது தொடர்பாக எச்சந்தர்ப்பத்திலும் விரிவாக விளக்க மளிக்க தயார் என்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதுவருடத்தை முன்னிட்டு முஸ்லிம் தூதுக்குழுவொன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்த முஸ்லிம் தூதுக்குழுவில் முஸ்லிம் வர்த்தகர்களும் உள்ளடங்கியிருந்தனர்.
முஸ்லிம் பிரநிதிநிதிகள் உள்ளடங்கிய தூதுக்குழு கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகள் மற்றும் தற்காலத்தில் முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, தான் முஸ்லிம்களுக்கெதிராக எவ்வித இனவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லையென்றும், இதுதொடர்பாக எச் சந்தர்ப்பத்திலும், எங்கும் விரிவாக விளக்கமளிக்க தயாராக உள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment