வரிச்சுமை எப்போது குறைப்பது தொடர்பில் அமைச்சர் விளக்கம்!

தற்போதுள்ள வரிச்சுமையை இந்த வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருட ஆரம்பத்துக்குள் குறைக்கலாம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு -நாரஹேன்பிட்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

இந்த வரிச்சுமையை குறைப்பதனூடாக கிடைக்கும் பிரதிபலனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது நாட்டின் கடன் சுமையை செலுத்துவதற்கு போதிய வருமானம் இருக்கவில்லை.

ஆனால், 2017 ஆம் ஆண்டில் நாட்டின் மூலதனச் செலவை ஏற்கக் கூடிய வகையில் வருமானம் உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Comments