அத்துரலியே ரதன தேரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை


ஜாதிக ஹெல உறு­ம­ய கட்சியின் கொள்­கைக்கு இணங்கிச் செயற்­பட்ட கார­ணத்­தி­னா­லேயே அத்­து­ர­லியே ரதன தேர­ருக்கு தேசியப் பட்­டியல் ஆசனம் வழங்­கப்­பட்­டது.

எனவே அவர் சுயா­தீ­ன­மாக செயற்­பட விரும்­பினால் கட்­சியின் ஆச­னத்­தி­லி­ருந்து விலக வேண்டும் என ஜாதிக ஹெல உறு­மய தெரி­வித்­துள்­ளது.

அக்­கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தின் போது கட்சிக் கொள்­கைக்கு இணங்­கி­விட்டுத் தற்­போது கொள்­கைக்குப் புறம்­பாக செயற்­படும் அத்­து­ர­லியே ரதன தேர­ருக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை இது­வென்றும் ஜாதிக ஹெல உறு­ம­யவின் தேசிய அமைப்­பா­ளரும் மேல்­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான  நிஷாந்த வர்­ண­சிங்க தெரி­வித்தார்.

ஜாதிக ஹெல உறு­ம­யவின் அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,
கடந்த சில நாட்­க­ளுக்கு முன்­பாக ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினால் ஜாதிக ஹெல உறு­மய­விற்கு வழங்­கப்­பட்­டுள்ள தேசிய ஆச­னத்­தினை பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்தும் அத்­து­ர­லியே ரதன தேரர் தான் தனித்து சுயா­தீன பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக  செயற்­படப் போவ­தா­கவும் நல்­லாட்­சியை சீர­மைக்க சக்தி திரட்டப் போவ­தா­கவும் ஊட­கங்கள் முன்­னி­லையில் பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்தார்.

இருப்­பினும் இன்று வரையில் அந்த நிலைப்­பாட்­டினை அவர் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மயவின் மத்­திய குழு­விற்கு அறி­விக்­க­வில்லை.

இது எவ்­வா­றி­ருப்­பினும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் ஜாதிக ஹெல உறு­மய கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் போது செய்­து­கொண்ட ஒப்­பந்தத்தின் பிர­காரம் எமக்கு கிடைத்த தேசிய பட்­டியல் ஆசனம் எமது கட்சி உறுப்­பினர் என்ற வகையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினால் எமக்கு வழங்­கப்­பட்ட தேசிய பட்­டியல் ஆச­னத்தில் அத்­து­ர­லியே ரதன தேரர் அமர்த்­தப்­பட்டார்.

ஜாதிக ஹெல உறு­மயவின் கொள்­கை­க­ளுக்கு இணங்­கியே தாம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்­தி­டு­வ­தாக கட்­சியின் மத்­திய குழு கூட்­டத்தின் போதும் அத்­து­ர­லியே ரதன தேரர் அறி­வித்­தி­ருந்தார்.

ஆனால் அவரின் தற்­போ­தைய செயற்­பா­டுகள் கட்சி யாப்­பிற்கு முற்­றிலும் புறம்­பாக உள்­ளது.

எனினும், அவர் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டுவேன் என்று தீர்­மா­னித்­தது அவரின் தனிப்­பட்ட முடிவு என்­பதால் அது­கு­றித்த பிரச்­சி­னைகள் எமக்கு இல்லை. ஆனால் அவர் கட்­சியின் யாப்­புக்கு புறம்­பாக செயற்­ப­டு­கின்றபோது எமது கட்­சியின் தேசிய பட்­டியில் உறுப்­பினர் என்ற வகையில் அந்த செயற்­பா­டு­களை அனு­ம­தியோம்.

எனவே, ஜாதிக ஹெல உறு­ம­ய­வினால் அவ­ருக்கு வழங்­கப்­பட்ட தேசிய பட்­டியல் ஆச­னத்­தி­லி­ருந்து விலகி அவர் அர­சாங்­கத்­தினை நெறிப்­ப­டுத்த வேண்டும் என்று தீர்­மா­னித்­துள்­ளதை நாம் எதிர்க்­கப்­போ­வ­தில்லை அதனால் முதற் படி­மு­றை­யாக கட்­சியின் தேசியப் பட்­டியல் பத­வி­யி­லி­ருந்து விலகிச் செல்­லு­மாறும் அவர் மீது கட்­சியின் மத்­திய குழு மேற்­கொண்­டுள்ள ஒழுக்­காற்று நட­வ­டிக்­கையின் விளை­வா­கவே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் எழுத்துமூலம் அறிவித்துள்ளோம்.

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் உள்ளிருந்து அரசாங்கத்தையே விமர்சிக்கும் சுதந்திரம் இன்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறானதொரு தீர்மானம் எடுத்துள்ளமை காலோசிதமானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

Comments