வசீம் தாஜுதீனின் காரில் மேலும் ஒரு நபர்: நீதிமன்றில் தகவல்

கொலையான பிரபல ரக்பி விளையாட் வீரர் வசீம் தாஜுதீனின் காரில் அடையாளந்தெரியாத ஒரு நபர் பயணித்துள்ளதாகவும் தற்போது அந்நபரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் அடிப்படையிலான விசாரணை இடம்பெறுவதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த அரசில் விபத்தென மூடி மறைக்கப்பட்ட குறித்த விவகாரம் மீண்டும் தேசிய அரசில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கொலையென தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

எனினும், சிசிடிவி பதிவுகளும் தெளிவில்லாத நிலையில் தற்போது உள்நாட்டு விசாரணைகள் வெ வ்வேறு கோணங்களில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments