பாலமுனை கடற்கரையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!
காத்தான்குடி – பாலமுனையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சடலம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவருடையாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
வழமைபோன்று இன்று காலை கடலுக்குச் சென்ற மீனவர்கள் நடுவோடைக் கடற்கரைப் பகுதியில் சடலம் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதன் பின்னர் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Comments
Post a Comment