கேரளா கஞ்ஞாவுடன் ஒருவர் கைது


கிண்ணியா பூவரசந்தீவு பகுதியில் 1கிலோ 500கிரேம் கேரளா கஞ்ஞாவுடன் நபரொருவரை இன்று (29) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதை இடத்தைச்சேர்ந்தவர் (58வயது) எனவும் தெரியவருகின்றது.

திருகோணமலை மாவட்ட போதை வஸ்து தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வீட்டை சுற்றி வளைத்த போது வீட்டுக்குள் விற்பனைக்காக பெகட் செய்து கொண்டிருக்கும் போது கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரை திருகோணமலை மாவட்ட போதை வஸ்து தடுப்பு பிரிவினர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

Comments