மஹிந்தவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை!
பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் டிலாந்த விதானகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கும் அமைப்பிற்கும் களங்கம் ஏற்படும் வகையில் மஹிந்த வெளிநாட்டு ஊடகங்களிடம் அண்மையில் கருத்து வெளியிட்டார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தொடரப்பட உள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் கருத்தினால் கட்சிக்கு ஏற்பட்ட அவமானம் தொடர்பில் நட்டஈடு கோரி இவ்வாறு வழக்கு தொடரப்பட உள்ளது.
நட்டஈடு கோரி முதலில் நிபந்தனைக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்படும். நட்டஈடு வழங்கப்படாவிட்டால் வழக்குத் தொடர நேரிடும்.
இதேவிதமாக தமது அமைப்பின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் விமல் வீரவன்சவும் சில ஊடக நிறுவனங்களும் கருத்து வெளியிட்டு வருகின்றன.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சர்வதேச ஊடகங்களிடம் ஞானசார தேரரை “இந்த ஆள” என மரியாதை குறைவாக கூறியிருந்தார்.
பொதுபலசேனா அமைப்பு அமெரிக்க மற்றும் நோர்வே பணத்தைக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகவும், இதற்கு சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரட்ன ஆகியோர் உதவி செய்து வருவதாக மஹிந்த குற்றம் சுமத்தியிருந்தார் என டிலாந்த விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment