பிற மத உறவுகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்""
(உணர்ச்சி பூக்கள் ஆதில்)
புகழ் யாவும் இறைவனுக்கே!
சீர்மார்க்கம் தந்த சீமான் எங்கள் கோமான் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் தோழர்கள் குடும்பத்தினர்கள் நல்லவர்களாக வல்லவர்களாக வாழும் அனைவர்களுக்கும் இறைவனின் கருணை உண்டாவதாக!
இப்புவி இறைவனின் சந்தை மடமாகும் இது நிரந்தரம் அல்ல ஆதி பிதா ஆதம் அலை அவர்கள் படைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மனித கோடிகள் யாவரும் 60/70வயதிற்குட்பட்ட கால வறையறைக்குட்பட்ட வாழ்வுக்காக போராடிக்கொண்டிருக்கும் இம்மனித வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள் எத்தனை குரோதங்கள் அத்தனையும் தகுமா?
அதற்கான வழிநடாத்தல் அழகிய தலைமைத்துவம் என எமது இறுதி தூதர் முகம்மது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டிய பண்பாகும்
அவர்கள் கோடிட்டுக் காட்டிய வாழ்க்கை வழிமுறைகள் ஓர் இறைக்கொள்கையென்றாலும்
மானுடவியல் மனு நீதித் சட்டம் அரசியல் கலாச்சாரம் நட்பண்பு கொடுக்கல் வாங்கல் உணவளித்தல் உணர்வுகளை மதித்தால் பிற உறவு களையும் அவர்கள் உணர்வு களுக்கும் மதிப்பளிக்கும் விதத்தில் எமக்கு வாழ்ந்தும் சொல்லி காட்டிவிட்டும் சென்றிருக்கிறார்கள்
இஸ்லாம் காட்டும் நட் பண்பும் நற்குணங்களும் அருமையே!!!
பெண் குழந்தைகள் பிறந்தால்
புதைகுழி தோண்டி புதைத்த சமூகம் அது ஒரு காலம் சிறு பகைமையை வீராப்பாய் நெஞ்சில் சுமந்தபடி கோத்திரம் கோத்திரமாக சண்டையிட்டு விரோதிகளின் மண்டை ஓடுகளில் மது அருந்தி வாழ்ந்தவர்கள் யாவருக்கும் இதுதான் வாழ்கை இதுதான் அன்பு இதுதான் சமூகத்தின் உணர்வுகள் என வாழந்து காட்டினார்கள்
பிற சமுதாயத்தில் ஏன் நபியவர்கள் வாழவில்லையா அவர்கள் 40 வயது வரை சகல வித சமூகத்தினருடன்தான் வாழ்ந்திருக்கிறார்கள் பிர உறவுகள்
நபியவர்களுக்கு அல் அமீன் எனும் பெயர் சூட்டி அழைக்கும் அளவிற்குத் அன்புடனும் பணிவுடனும் பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் வாழ்திருக்கிறார்கள்
#அவர்கள் பொறுமை
நபியவர்கள் இறையில்லம் அதிகாலை செல்லும் போது குப்பை கொட்டும் மூதாட்டி.
நபியவர்கள் தொழும்போது
அழுகிய ஒட்டக குடலை தலையில் போடும் அபூ ஜஹ்ல் சற்றும் சினம் கொல்லவில்லை அவர்களுடன் அன்பாகவே பழகினார்கள்.
#விருந்து உண்ணுதல் விரோதியுடனும் கனிவு
ஒருதடவை யூத பெண்மணி ஒருவர் நபியவர்களை விருந்துக்கு அழைத்து அவ்வுணவில் இறைச்சியில் விசத்தை கலந்து கொடுத்திருந்தாள் அதை சாப்பிட்ட நபியவர்கள் நோயால் வதைப்பட்டபோதும் அப்பெண்ணின் மனசு நோகும்படி நடந்து கொல்லவில்லை அதை அந்த இடத்தில் மறந்தார்கள் மண்ணித்தார்கள்
#கலாச்சாரம்
அவர்கள் வணக்கஸ்தலங்களை
நீங்கள் சிதைக்கவேண்டாம்
அவர்கள் வழிபடும் கலாச்சார சின்னங்களை வழிமுறைகளை நீங்கள் கொச்சைப்படுத்த வேண்டாம் என எச்சரித்தார்கள்
#உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு அவர்களுடைய மார்க்கம் அவர்களுக்கு. (அல்-குர்ஆன்)
#உணவளித்தல்
குர்ஆன் உழ்கியா விடயத்தில்
எவ்வித பாகுபாடின்றி முஸ்லிம் ஏழைகள் முஸ்லிம் அல்லாத ஏழைகள் என்றில்லாமல் பொதுவாகவே
பிரமத உறவுகளுக்கு உணவளிக்கும் படியும் மார்க்க விசயத்தில் உங்களுகளுடன் போரிடாமல் இருக்கும் பிரமத உறவுகளுடன் அன்புடன் நல்ல படியாக அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நன்மை செய்யும் படியும் அவர்களுக்கு நீதிசெய்வதையும் இஸ்லாம் விலக்க வில்லை
பார்க்க 60:8,9 பதாவா
அல்லஜ்னதுல் தாயிமா 10/437/438
அல்-குர்ஆனில் பார்க்க-22,28
#கொடுக்கல் வாங்கல்
நபி ஸல் அவர்கள் யூத சகோதரரிடம் பெற்ற கடனை திருப்பி கொடுக்க தாமதித்ததால் கண்டவாறு திட்டினார் சஹாபாக்கள் கொதித்தனர் ஆனால் நபியவர்கள் சொன்னார்கள
ஒரே வார்த்தை விடுங்கள் அவரை அவருக்கு கொடுக்க வேண்டிய கடனுக்காக அவர் கோபப்படுகிறார்
எனறு கூறி மண்ணித்த்தார்கள் இத்தனைக்கும் ஆட்சி தலைவராகவும் அவ்வூர் ஜனாதிபதி யாகவும் இருந்தவர்கள் நபியவர்கள்
அவர்கள் தீயவழி நாடியிருந்தால் நினைத்ததை செய்திருக்கலாமல்லவா?
#பிற மதத்தவர்கள் மீது அன்பு
பாதையில் ஓர் பிரேதத்தை சுமந்தபடி சென்றிருந்தனர் அதைக்கண்ட நபியவர்கள் எழுந்து நின்று அந்த பிரேத உடலுக்கு மரியாதை செலுத்தி கவலைப்பட்டார்கள் அதற்கு தோழர்கள் யாவரும் யாரஸூலல்லாஹ் அவர் இஸ்லாமியர் அல்ல என்றனர் அதற்கு நபியவர்கள் அளித்த பதில்
இந்த மாமனிதரா அதுவும் ஓர் உயிர் அல்லவா என கவலைப்பட்டு அன்புடன் வருந்தியதுடன் பதில் அளித்தார்கள்..
எனவே நாம் இஸ்லாமியர்கள் என்று மார்தட்டி பிறமத உறவுகளையும் அவர்கள் உணர்வுகளையும் மதிக்காமல் வாழ்வது நாம் நபியவர்களுக்கு மாறு செய்வதாகும் இஸ்லாமிய பண்பாட்டினை கொச்சைப் படுத்துவதாகும்.
எவ்வளவு விரோதியாக இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பளித்தார்கள் கைபர் சண்டையின் போது பெண்களுக்கு அநியாயம் செய்யவேண்டாம் மரணித்த உடல்களை சேதம் செய்ய வேண்டாம் கர்ப்பினி தாய்மார்கள் வயோதிபர்கள்
குழந்தைகள் இவர்களுக்கு அநியாயம் செய்ய வேண்டாமென கூறி சண்டையில் வெற்றியீட்டிய பொருட்களை மீண்டும் அவ்வூர் மக்களுக்கே கொடுத்து அவ்வூர் மக்களுக்கு பெண்ணுரிமையையும்
அவ்வூரை அவர்களுக்கே மீண்டும் கொடுத்தார்கள் அவர்களுக்கான உரிமைகளை
வழங்கி யாவரும் ஒற்றுமையாக வாழுங்கள் என உணர்வுகளுக்குமதிப்பளித்து
அவர்கள் குடும்பங்களில் ஏதாவது பிரச்சினைகள் என்றால் சென்று தீர்த்து வைக்க கூடியவர்களாகவும்
அவர்களில் நோயுற்றால் நலம் விசாரிக்க கூடியவர்களாகவும் வாழ்ந்து காட்டினார்கள்
எனவே நாமும்
நம்முடைய அண்டைநாடு அண்டை உறவுகளுடன் உணர்வுகளை பகிர்ந்து அவர்கள் துண்பங்களில் பங்கு கொண்டும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ முயற்சி செய்து நற்பண்பினை வளர்த்து
யுத்தங்களற்ற ரத்தங்கள் சிந்தா
யுகத்தினை அகத்தின் அன்பால்
வளர்தெடுப்போம்.
நற்குணமே நல் வாழ்வு
நன்றே சிறக்கும் நம் வாழ்வு
எனக்கேட்டு விடைபெறும் நான் உங்கள் அன்பின் தோழன்


Comments
Post a Comment