தொழுகை - ஜமாஅத்துத் தொழுகை
٤٨- عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلْمُؤَذِّنُ يُغْفَرُ لَهُ مَدَي صَوْتِهِ، وَيَشْهَدُ لَهُ كُلُّ رَطْبٍ وَيَابِسٍ، وَشَاهِدُ الصَّلاَةِ يُكْتَبُ لَهُ خَمْسٌ وَعِشْرُونَ صَلاَةً، وَيُكَفَّرُ عَنْهُ مَا بَيْنَهُمَا.
رواه ابوداؤد باب رفع الصوت بالاذان رقم:٥١٥
48. முஅத்தினுடைய குரல் கேட்கும் தொலைவு வரை அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்'', (அவருடைய குரல் கேட்கும் தொலைவுவரை உள்ள இடங்கள் பாவங்களால் நிரம்பி இருந்தாலும், அவை யாவும் மன்னிக்கப்பட்டுவிடும்). அவரது பாங்குச் சப்தத்தைக் கேட்கும் உயிருள்ளவை, உயிரற்றவை யாவும் கியாமத் நாளில் அவருக்காகச் சாட்சி சொல்லும், முஅத்தினுடைய பாங்குச் சப்தத்தைக் கேட்டுத் தொழ வருவோருக்கு 25 தொழுகைகளின் நன்மை எழுதப்படுகிறது. ஒரு தொழுகையிலிருந்து மறு தொழுகைவரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- 25 தொழுகைகளின் நன்மைகள் முஅத்தினுக்கு எழுதப்படுகிறது என்றும் ஒரு பாங்கிலிருந்து மறு பாங்குவரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் ஏற்பட்ட முஅத்தினுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'' என்று ஆலிம்களில் சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.
(பத்லுல் மஜ்ஹூத்)


Comments
Post a Comment