முதலமைச்சர் யாருக்காக…???
(நியாஸ் கலந்தர்)
இலங்கையில் முதலமைச்சர் (Chief Minister) எனப்படுபவர் மாகாண மட்டத்தில் அமைந்த உள்ளூராட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்படுபவரைக் குறிக்கும்.இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது முதலமைச்சர்கள் பதவியில் உள்ளனர்.ஏனைய எட்டு மாகாண சபையின் முதலமைச்சர்களை விட முஸ்லிம் முதலமைச்சராக கிழக்கு மாகணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் முஸ்லிம் காங்ரஸ் கட்சியின் சார்பாக தெரிவு செய்யப்பட்ட ஹாபிஸ் நஸீர்ர் அஹமட் அவர்கள்.
அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியதே கிழக்கு மாகாண சபை.கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படும் முதலமைச்சர் மூன்று மாவட்டங்களையும் சமமாக பார்க்க வேண்டிய கடப்பாட்டை கொண்டவர்.மூவின மக்களும் வாழும் மாகாண சபையின் அபிவிருத்தி திட்டங்களை மூன்று மாவட்ட மக்களும் சுவைக்க வேண்டும்.
முஸ்லிம் காங்ரசை ஆதரித்து வாக்குகளை அளிக்கும் மக்கள் மூன்று மாவட்டங்களிலும் காணப்படுகின்றனர்.முஸ்லிம் காங்ரசை பிரதிநிதித்துவப்படுத்தி தற்போது அரியாசனம் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் பிறந்தவர்.இவருடைய அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளும் அவரது மாவட்டத்தில் மட்டும் நடைபெறுவதை ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது.மாகாணத்தின் முதலமைச்சராக வர வேண்டுமாக இருந்தால் மூன்று மாவட்டங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.மூன்று மாவட்டங்களும் சேர்ந்து முஸ்லிம் காங்ரஸ் கட்சிக்கு வாக்களித்ததன் பிரதிபலனே காபிஸ் நஸீர் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாணத்தின் நிர்வாக மாவட்டங்களில் ஒன்றான அம்பாறையை,முஸ்லிம் காங்ரசின் இதயம் என அக் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் வர்ணிப்பதுண்டு.அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரை அதிகளவான முஸ்லிம் காங்ரஸ் போராளிகள் காணப்படுகின்றனர்.கிழக்குமாகாண முதலமைச்சர் பதவிக்கு முஸ்லிம் காங்ரஸ் உறுப்பினர் வர வேண்டும் என வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியவர்கள் அம்பாறை மாவட்ட மக்கள்.அவ்வாறானவர்களை தற்போதைய முதலமைச்சர் புறக்கணிப்பது நியாயமற்ற செயலாகும்.மூன்று மாவட்டங்களையும் சமமாக நோக்க வேண்டிய முதலமைச்சர் தான் பிறந்த மாவட்டத்தை மட்டும் ஒற்றைக் கண் கொண்டு பார்க்கின்றார்.
அம்பாறை மாவட்டத்தில் மாகாண சபையினூடாக தீர்த்து வைக்கபட வேண்டிய பல குறைபாடுகள் காணப்படுகின்ற போதும் அக் குறைபாடுகள் இன்னமும் நிபர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது.மாகாண சபைக்கு உரிய வைத்தியசாலை,பாதைகள்,பாடசாலைகள்,காணிகள் போன்ற பிரச்சினைகள் நிபர்த்தி செய்யப்படாமல் உள்ளது.மாகாண முதலமைச்சர் என்ற கடன் தீர்க்க இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
அம்பாறை மாவட்ட மக்கள் மாகாண சபையினூடாக நிறைவேற்ற பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாகவும்,அவர்களின் குறைபாடு சம்பந்தமாகவும் நீங்கள் பதவி ஏற்ற காலத்திருந்து இற்றைவரை ஒரு முறையாவது வந்து கேட்டறியவில்லை என்பது அம்பாறை மாவட்ட மக்களின் மனக் குறையாகவே இருக்கிறது.மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் உங்களால் அம்பாறை மாவட்டத்திற்கு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் முதலமைச்சரின் செயலகம் ஒன்றை உருவாக்கி ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் குறைகளை கேட்டறியக் கூடிய நடவடிக்கையை மேற் கொண்டிருக்க முடியும்.வாக்குகளை மட்டும் குறி வைக்கும் முஸ்லிம் காங்ரஸ் கட்சியின் அரசியல்வாதிகள் மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என நேரத்தை செலவு செய்வது அவர்களுக்கு கஷ்டமான காரியமாக தெரிகிறது.அம்பாறை மாவட்டத்தில் மாகாண அமைச்சுக்கு சொந்தமான வைத்தியசாலைகளில் வைத்தியர் பற்றாக்குறையான நிலை உள்ளது.நீங்கள் பதவிக்கு வந்த காலத்தில் இருந்து இன்று வரை எத்தனை வைத்தியசாலைக்கு சென்று குறைகளை கேட்டறிந்திருப்பீர்கள்.அம்பாறை மாவட்ட பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை,மாகாண அமைச்சுக்குரிய வீதி செப்பனிடல் போன்ற பிரச்சினைகளை நேரில் சென்று பார்வையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என எப்போதாவது நினைத்ததுண்டா என்பதை உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்.
முதலைமைச்சர் என்ற வகையில் மீதமாக இருக்கும் ஆட்சி காலத்திலாவது அம்பாறை மாவட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுகளையும்,குறைகளையும் நிபர்த்தி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.என்பது அம்பாறை மாவட்ட மக்களின் வேண்டுகோளாகும்.

Comments
Post a Comment