மீராவோடையை பூர்விகமாகக் கொண்ட உதுமா லெப்பை மாஸ்டர் ஒரு பார்வை., சாட்டோ வை.எல்.மன்சூர்

(ihzana fareed)

ஓட்டமாவடி பிரதேச செயலகம்,பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை என்ற வரலாற்று பூர்வீகக் கிராமத்தை தளமாகக் கொண்ட அஹமது லெப்பை,அலிமாக்கண்டு ஆகியோர்களின் ஆறாவது புதல்வர் உதுமா லெப்பை மாஸ்டர் என்ற ஓய்வு பெற்ற அதிபர்.

1956 ஆம் ஆண்டு செம்மண்ணோடை என்ற கிராமத்தை கொளனித் திட்டத்தின் அடிப்படையில் மாதிரிக் கிராமமாக உருவாக்கும் காலகட்டத்தில் அன்று முதலாவது குடியேறிய 20 குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.
தற்போது செம்மண்ணோடை - வாழைச்சேனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.ஏ.கபூர் அவர்களின் வாழ்விடம்தான் உதுமா லெப்பை மாஸ்டர் வாழ்ந்த குடியிருப்பாகும்.

செம்மண்ணோடை வரலாற்றை பின்னோக்கிப் பார்க்கின்ற போது உதுமா லெப்பை மாஸ்டர் செம்மண்ணோடை கிராமத்தின் முதலாவது குடியிருப்பை கொண்டு வாழ்ந்த முதலாவது அரசாங்க உத்தியோகத்தராக வரலாற்றில் தடம் பதிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவரது கட்சி அரசியலைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீவிர செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களால் 19 பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பணிபுரிந்துள்ளார்.

அத்தோடு அதன் பின்னர் இன்று வரை அவர் தீவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளராகவும்,மேடைப் பேச்சாளராகவும் இருந்துள்ளார் என்பதும் கவனிக்கத் தக்கது.

அவர் கல்குடா ஜம்இய்யது தஃவத்தில் இஸ்லாமிய்யாவின் பொதுத் தலைவர்,கலாசார உத்தியோகத்தர் மௌலவி பீர் முஹம்மத் மற்றும் ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் முஹம்மட் புஹாரி ஆகியோருக்கும் மாமனார் என்பது குறிப்பிடத் தக்கது.

முதுசங்களை திரும்பிப் பார்ப்பவர்கள் உதுமா லெப்பை ஓய்வு பெற்ற அதிபர் அவர்களையும் திரும்பிப் பார்ப்பது வரலாற்றின் பயணமாகும்.....................

Comments