இலங்கையில் இனி அதற்கும் கட்டணம் அறிவிடப்படும்!

அமைச்சுக்களில் இருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் போது பணம் வசூலிக்கப்படுவது குறித்து தகவல் ஆணைக்குழு கலந்துரையாடியுள்ளது.

பெப்ரவரி 03ம் திகதி முதல் தகவலறியும் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், அதற்குறிய விதிமுறைகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஏதேனும் தகவல்களை எழுத்து மூலம் பெற்றுக் கொள்வதாயின் அதற்கு கட்டணம் அறவிடுவதற்கு இங்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எழுத்து மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்வதாயின் முதல் மூன்று பக்கங்களுக்கும் கட்டணங்கள் அறவிடுவதில்லை என்றும், 04வது பக்கத்தில் இருந்து 05 ரூபா வீதம் அறவிடுவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Comments