மஹிந்தவை நெருங்கும் ஆபத்து!

ஊழல் மோசடி குறித்து விசாரணை செய்ய விசேட நீதிபதிகள் குழாமொன்றை அமைப்பதற்கு அமைச்சர் சரத் அமுனுகமவால் சமர்ப்பிக்கப்பட்ட வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த வரைபு முன்வைக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

இதனையடுத்து இதுகுறித்த மேலதிக தீர்மானத்திற்காக குறித்த சட்ட வரைபு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

மஹிந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்து விசாரிக்க விசேட பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படுமென அமைச்சர் சரத் அமுனுகம ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

குறித்த பொறிமுறை தொடர்பில் 17 அமைச்சர்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments