மின்சார தடை ஏற்படுத்தப்படுமா?
வறட்சியான காலநிலை ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நீடித்தாலும் மின்சார தடைப்படாது என அரசாங்கம் மீண்டும் உறுதியளித்துள்ளது.
அத்துடன் மின்சார கட்டணம் உயர்த்தப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு விசேட பரிசு வழங்கப்படும் வேலைத்திட்டம் ஒன்று செயற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதாரண மின்குமிழ்களுக்கு பதிலாக எல்.ஈ.டி மின்குமிழ்களை இலவசமாக வழங்குவதற்கான யோசனையை விரைவில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment