ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்!
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூவர் அடங்கிய குறித்த ஆணைக்குழுவில், ஓய்வு பெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் கே.வேலுப்பிள்ளை, ஓய்வு பெற்ற நீதியரசர்களான கே.டீ.சித்ரசிறி மற்றும் நீதியரசர் பீ.எஸ்.ஜயவர்தன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
குறித்த மூவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment