கோர விபத்தில் ஒருவர் பலி!
பிலியந்தலை – படகெத்தர – கதிரான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி, வீதியை விட்டு விலகி அருகில் இருந்து பாதுகாப்பு சுவரில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உள்ளிட்ட 4 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், மொரடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Comments
Post a Comment