ரஞ்சனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் திவுலப்பிட்டிய பிரதேச செயலாளரிடம் தகாத வார்த்தைகள் பிரயோகித்த குற்றச்சாட்டு காரணமாக இவ்வாறான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தகாத வார்த்தைகளை பிரயோகித்தமையால் அவர் பிரதேச செயலாளரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோரிக்கையும் விடுக்கப்பட்டே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமை, கம்பஹா மாவட்ட நிர்வாக சேவைகள் சங்கம், மஹர பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இவ்வாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்,
சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவதை நிறுத்துவார்கள் என்றால் நான் யாரிடமும் மன்னிப்புக் கோர தயார் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திவுலப்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment