ராஜபக்ச குடும்பத்துடன் எதுவித ‘டீலும்’ இல்லை: மைத்ரி
மோசமான குற்றச்சாட்டுக்குள்ளான ராஜபக்ச குடும்பத்தினர் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மஹிந்த குடுமப்த்துடன் டீலில் ஈடுபட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வரும் கருத்தை அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடாக மறுத்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
மஹிந்த ராஜபக்சவுடன் சில ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பைப் பேணுவதாகவும் இது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி தன்னைச் சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ள ராஜித, மக்கள் ஆணையை ஒரு போதும் தாம் தவறாகப் பயன்படுத்தப் போவதில்லையென மைத்ரி தெரிவித்ததாகவும் களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment