காதல் விவகாரத்தால் வசீம் தாஜுதீன் பழி தீர்க்கப்பட்டார் – வெளிவரும் புதிய தகவல்

றக்பி வீரர் வசீம் தாஜு­தீனின் மரணம் காத­லுடன் தொடர்­புபட்­ட­தாகும். பெண் ஒருவர் தனது காத­லனைக் கைவிட்டு வசீம் தாஜு­தீனைக் காத­லித்­த­னா­லேயே அவர் மீது பழி தீர்க்­கப்­பட்­டது என சுகா­தாரம் போசனை மற்றும் சுதேச வைத்­தி­யத்­துறை அமைச்­சரும் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

நேற்று மதியம் அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்;
‘மத்­திய வங்­கியின் பிணை முறி­யுடன் சம்­பந்­தப்­பட்ட அர்­ஜுன மகேந்­தி­ரனின் மரு­மகன் அலோ­சியஸ் மற்றும் சிலர் கைது செய்­யப்­படவில்லை என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக் ஷ பாரா­ளு­மன்­றத்தில் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

இவர்கள் இரு­வரும் அன்று காத­லர்­க­ளாக பழ­கி­ய­வர்கள். இன்று அலோ­சியஸ் மறு­த­ரப்பு ஆத­ர­வா­ள­ராக இருக்­கின்­ற­மை­யி­னா­லேயே இவ்­வாறு தெரி­விக்­கிறார். அவர்கள் காத­லர்கள் போன்று அன்­பாக இருந்­த­வர்கள் நெருங்கிப் பழ­கி­ய­வர்கள்.

அர­சி­யலில் தம்­முடன் நெருங்கிப் பழ­கி­ய­வர்கள் எதிர்த்தரப்­பினை ஆத­ரிக்­கும்­போது பழி­வாங்க வேண்டும் என்று நினைக்­கி­றார்கள். அதுவே இன்று நடக்­கி­றது. வசீம் தாஜு­தீனின் மர­ணமும் இவ்­வாறே காதல் கார­ண­மாக பழி தீர்க்­கப்­பட்­டது.

காத­லுக்­காக இந்தக் கொலை நடை­பெற்­றுள்­ளது.

முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ஸ சந்­தேக நபர் மாத்­தி­ரமே. அவரை சிறையில் அடைத்­துள்­ள­தாக சிலர் பிர­சாரம் செய்­கி­றார்கள். அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­களின் பீ அறிக்­கையை பொலிஸார் நீதி­மன்றில் சமர்ப்­பித்­துள்­ளார்கள்.

40 அரச வாக­னங்­களை அவர் தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­யுள்ளார். 40 வாக­னங்­களில் 14 வாக­னங்கள் நெருங்­கிய உற­வி­னர்­களின் பாவ­னைக்கு வழங்­கி­யுள்ளார். 5 வாக­னங்கள் வாடகை சேவைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இத­னா­லேயே அவ­ருக்குப் பிணை வழங்­கப்­ப­ட­வில்லை.

இதே­வேளை, விமல் வீர­வன்­ஸவின் வாகன மோசடி தொடர்பில் லசந்த அழ­கி­ய­வன்­ன­வையும் முன்னாள் பொறி­யியல் கூட்­டுத்­தா­பனத் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்பினருமான ஆஷு மாரசிங்கவையும் கைது செய்ய வேண்டுமென நாமல் ராஜபக் ஷ கூறுகிறார்.

வாகன மோசடியில் நேரடியாகத் தொடர்புபட்டவர் முன்னாள் அமைச்சராக இருந்த விமல் வீரவன்ஸவே அதனாலே அவர் கைது செய்யப்பட்டார் என்றார்.

Comments