புதிய கட்சியின் பிரச்சாரப் பணியில் நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் பெயரில் மஹிந்த ஆதரவாளர்கள் உருவாக்கி வளர்த்து வரும் கட்சிப் பணிகளில் நாமல் ராஜபக்சவும் பகிரங்கமாக ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

இதனடிப்படையில் நாளைய தினம் தொம்பே பகுதியில் இடம்பெறவுள்ள கட்சிக் கூட்டத்தில் நாமலும் பங்கேற்கவுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. தான் ஒரு போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுப் போகப் போவதில்லையென மஹிந்த ராஜபக்ச தெரிவித்து வருகின்றமை அதேவேளை குறித்த கட்சியின் தலைமைப் பதவியை அவரிடமே கையளிக்கப் போவதாக ஜி.எல். பீரிஸ் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments