உடைக்கப்பட்ட புத்தர் சிலைகள்! இனவாதத்தை தூண்டும் முயற்சியா?

இலங்கையின்  திருகோணமலையில் 4 இடங்களில் இனம் தெரியாத மர்ம நபர்களினால், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

குறித்த புத்தர் சிலைகள் மொரவெவே சந்தி, புல்மோட்டை 14 ஆம் கட்டை, வெல்கம் விகாரை மற்றும் திரியாய் சந்தியிலே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.

மேலும், யார் புத்தர் சிலைகளை உடைத்தது என்பது தொடர்பாக இது வரை தகவல் இல்லை.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பெரும்பான்மை மக்களை சீண்டிவிடும் சில அரசியல் தந்திர காரர்களின் முயற்சியாக
 இருக்குமோ என சிலர் விமர்சனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments