கிழக்கில் உயர்தரத்தில் வெற்றிப்பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு!

இலங்கையின் மொத்த சனத்தொ கையில் மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகையின் வீதம் 2.59% ஆகும். இதன் அடிப்படையில் 2015ம் ஆண்டில் பல்கலைகழகத்திற்கு தெறிவு செய்யப்பட்ட தொகையினரின் அளவில் 2016ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு தெறிவு செய்யப்படும் இடத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சனத்தொகைக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் 458 மாணவர்களுக்கான பல்கலைகழக வாய்ப்பு உறுதியானது.

மட்டக்களப்பு மாவடத்திதில் இருந்து திறமை அடிப்படியிலும் அதி திறமை அடிப்படையிலும் சித்தியடையும் மாணவர்களின் தொகையின் அளவு 458 மாணவர்களுக்கு மேலதிகமான வாய்ப்புகளாக அந்த வாய்ப்புகள் அமையும்???

பரீட்சை எழுதிய மாணவர்களில் தமது துறைகளில் இலங்கை ரீதியில் (Island Rank) முதல் 10வீத இடங்களுக்குள் (Supper Merit Pass) வருபவர்கள் விரும்பிய பல்கலைக்கழகங்களை தெறிவு செய்து படிக்கும் வாய்ப்பை பெறுவதுடன்….. தீவாலான (Island Rank ) முதல் 40வீதமான இடங்களுக்குள் (Merit Pass )வருபவர்கள் தமது மாவட்டங்களுக்கு மேலதிகமான வாய்ப்புகளை உறுதி செய்பவர்களாகவும் இருக்கின்றனர்….

இதன் அடிப்படையில் மருத்துவ துறையில் தீவாலாகியரீதியில் முதல் 502 இடங்களுக்குள் வருபவர்களும் பொறியியல் துறையில் முதல் 641 இடங்களுக்குள் வருபவர்களும் முகாமைத்துவ துறையில் தீவாலாகியரீதியில் முதல் 1754வது இடங்களுக்குள் தெறிவாகும் மாணவர்களும் தத்தம் மாவட்டங்களின் மேலதிக பல்கலைக்கழக ஆசனங்களை சக மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் புண்ணியத்தை செய்பவர்களாக இருக்கின்றனர்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் சனத்தொகைக்கான ஒதுக்கீட்டின்படி 18மாணவர்கள் மருத்துவ துறைக்கும், 23 மாணவர்கள் பொறியியல் துறைக்கும், 62 மாணவர்கள் முகாமைத்துவ துறைக்கும் தெறிவு செய்யப்படுவர். தீவாலாகியரீதியில் இந்தத்துறைகளில் திறமை மற்றும் அதி திறமை அடிப்படையில் மாவட்டத்தில் இருந்து தெறிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையின் அளவு அந்த துறைகளில் தெறிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையின் அளவும் அதிகரிக்கும்.

இப்பதிவில் கூறப்பட்டுள்ளவாறு Merit, super merit போன்றவர்கள் நம்மட மாவட்டத்தை தாண்டிய பல்கலைக்கழகம் கிடைக்கும். அதற்கு மேற்பட்ட ரேங் உடைய மாணவர்களின் பெறுபேறுக்கு அமைய கிழக்கு பல்கலைக்கழகத்தில் இல்லாத பீடங்கள் இருந்தாலும் வேறு பல்கலைக்கழகத்தை தேர்வு செய்யலாம்.

ஆனால் கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள பௌதீகவியல், விஞ்ஞானம், விவசாயம், முகாமைத்துவம், தாதியர், போன்ற கற்கைநெறிதான் கிடைக்கும் என தெரிந்தும் 50வது ரேங்கிட்கு மேற்பட்டவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழகம், வயம்ப, சப்பிரமுவா ,றுகுணு போன்ற பல்கலைக்கழகத்தை முதலில் தேர்வு செய்வதை தவிர்த்து கிழக்கு பல்கலைக்கழகத்தை பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பம் நிரப்பும் போது தேர்வு செய்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான, முகாமைத்துவ , விவசாயம் போன்ற பீடங்களில் எமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்த முறை பெறுபேறு பெற்ற மாணவர்களும் அவர்களின் பல்கலைக்கழக அனுமதி நிரப்பும் கல்வியாளர்களும் முயற்சி செய்வோமாக.

Comments