அக்போபுரவில் சில்லரைக் கடையை உடைத்து பொருட்களை திருடிய இருவர் கைது

(ihzana fareed)

திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றினை உடைத்து அதில் உள்ள பொருட்களை திருடிய இருவரை கைது இன்று (26) அதிகாலையில் செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்போபுர மற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 23,மற்றும் 25 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் இணைந்து அக்போபுர பகுதியில் உள்ள சில்லரைக் கடையொன்றினை நேற்றிரவு(25) உடைத்து அதனூள் இருந்த பொருட்களை திருடியுள்ளதாக கடை உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இன்று வியாழக்கிழமை (26) அதிகாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments