பாடசாலை கட்டிட நிர்மாணம் நிறைவடையாதல் மாணவர்கள் சிரமம்


(ihzana fareed)

கிண்ணியா கல்வி வலயத்தில் தி-அல்-இர்பான் கணிஷ்ட வித்தியாலய மாணவர்கள் வகுப்பறை இன்றி பல்வேறு கஷ்டங்களுக்குள்ளாவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இக் கணிஷ்ட வித்தியாலயத்திற்கு இரண்டு கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு   மாகாண கல்வித் திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இக் கட்டிட கொந்தரத்து காரர்கள் இக் கட்டிடத்தின் ஒன்றினை கடந்த டிசம்பர் மாதத்திற்கு முன் நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும்

இது நிறைவடையாத நிலையிலேயே இம் மாணவர்கள் அளௌகரியங்களுக்குள்ளாவதாகவும் தெரிக்கின்றனர்.

இக் கணிஷ்ட வித்தியாலயத்தில்   சுமார் 400 மாணவர்களுக்கு மேல் கல்வி கற்று வருகின்றனர்.

இதனால் இம்மாணவராகள் மழைகாலங்களிலும், கோடை காலங்களிலும் சொல்லென தூயரங்களுக்குள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றனர்.

Comments