கிழக்கு மாகாண நூலகர் கிழக்கு மாகாண ஆளூனருடன் சந்திப்பு
ஏ.எம்.ஏ.பரீத்)
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நூலகர் தரம் மூன்றிற்கான ஆட்சேர்ப்பு போட்டிப்பரீட்சை திறந்த போட்டிப்பரீட்சை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை என வைக்கப்பட்டு டிப்ளோமா சித்தியை கொண்டிருந்த எவரும் சித்தி அடையாத நிலையில் கிழக்கு மாகாண ஆளூநரை சந்தித்தனர்.
இந் நிகழ்வு நேற்று 27 வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர்
தலைமையில் இடம்பெற்றது.
ஆளூனர் செயலக கேட்போர் கூடத்தில் ஆளூனர் ஒஸ்டின் பெர்னாண்டோ, ஆளூனரின் செயலாளர் திருமதி முரளிதரன் உட்பட பலரை சந்தித்துப் பேசினார்.
இதன் போது கிழக்கு மாகாணத்தில் ஏலவே 38 நூலகருக்கான தரம் (3) வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் நூலகர் டிப்ளோமா சித்தி அடைந்த 15 போரையும் நேரடி தகுதியின் அடிப்படையில் உள்வாங்குமாறு கோரிக்கை விடப்பட்டது.
இது விடயமாக ஆளூநர் அவர்கள் மீண்டும் பொது சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருடன் கலந்துரையாடி மீண்டும் பிறிதொரு தினத்தில் விரைவில் பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளரை அழைத்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்

Comments
Post a Comment