அரசாங்கத்திலிருந்து வெளியேறும் ரிஷாட், ஹக்கீம்?
முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்துக்கு நெருக்கடியான ஒரு நிலைமை வரும்போது அரசாங்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள் என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
இதில், முக்கியமாக அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் மட்டுமல்ல அமைச்சர் ஹக்கீமும் வெளியேறுவார்கள் எனவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சிறுபான்மையினருக்காக தலை கீழாக நின்றாலும், அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு வாக்கைக் கூட வழங்க மாட்டார்கள் எனவும் அக்கட்சி நேற்று சுட்டிக்காட்டியது.
மஹிந்த ராஜபக்ஷ தனது தோல்விக்கு பொதுபல சேனா அமைப்பு சூழ்ச்சி செய்ததாக தெரிவித்தமைக்கு மறுப்புத் தெரிவிக்க, பொதுபல சேனா அமைப்பினால் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவ்வமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இக்கருத்துக்களை முன்வைத்தனர்.


Comments
Post a Comment