மரம் வண்ணாத்திபூச்சியாக பறந்த கதைக்குரிய காலம் !

(அஸ்மி அப்துல் கபூர்)

மரம் வண்ணாத்திபூச்சியாக பறந்த கதைக்குரிய காலம் 2006

(நான் கூறப்போகும் விடயங்களில் பொய் கூறுபவனாக இருந்தால் அல்லாஹ் விடம் நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். )

2006 ம் ஆண்டுகளில் ஒரு பொழுது கல்கிஸ்ஸை கடற்கரை வீதி ஹசனலி சேரினுடைய இல்லம் 
கட்சியின் உயர்பீட உறுப்பினர் உவைஸ் அக்கரைப்பற்றிலிருந்து வரும் போதல்லம் ஒவ்வொரு முறையும் ஹசனலி சேரை சந்திப்பார்.
ஒவ்வொரு முறையும் நானும் அவருடன் செல்வதுண்டு.
இயலபாகவே நல்ல உபசரிக்கின்ற பண்புகளை கொண்ட மனிதன் தான் ஹசனலி சேர் அவரை விட ஒருபடி மேலானவர் அவருடைய மனைவி மிகவும் அருமையான தாய்.

அன்று ஒரு பகல் வேளை சேரின் இல்லத்தில் நுழைந்த போது அவரை
ஒரு போதும் அவ்வாறான கோப அடையாளங்களுடன் நான் கண்டதில்லை.
கண்டபடி திட்டிக் கொண்டும் தான் எதையோ இழந்துவிட்ட பரிதவிப்புடன் இருந்தார்.

என்ன விடயம் என்று கேட்பதற்க்கு முன்னர் அவரே கட்சியின் மரச்சின்னத்தில் இந்த தேர்தலில் கேட்க முடியாது தம்பி

ஏறாவூரை சேர்ந்த ஜமால்தீன் இசாக் என்பர் ஹாபீஸின் தூண்டுதலில் பின்புலத்தில் வழக்கு போட்டு நிறுத்தி இருக்கிறான்

இவ்வாறான ஒரு கேவலமான வேலையை தலைவர் இருக்கும் போது பிளவுபட்டவர்களோ பின் அதாஉல்லாவே ஒரு போதும் செய்யவில்லை

இது முஸ்லீம் சமுகத்தின் சின்னம் என்றவருடைய கண்கள் கலங்கி நின்றதை கண்டேன்.

கட்சியை எல்லோரும் நேசித்தார்கள் தலைமை களை மாற்ற அல்லது கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரவே பிளவுபட்டனர்.

ஆனால் இந்த கட்சியின் சின்னத்தை அதன் வரலாற்றை தலைவர் அஷ்ரப்பின் எண்ணங்களை காவு கொள்ள நினைத்த வரலாற்று கறை தான் அது.

அந்த உள்ளூராட்சி தேர்தலில் தான் மு.கா பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்தும் கொழும்பில் வண்ணாத்திபூச்சி யாகவும் ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு சின்னம் வெவ்வேறு குழுக்களாக பறந்து திரிந்து தேர்தலில் போட்டியிட்ட அவலம் உருவானது.

அவ்வாறான நிலையில் அந்த சிக்கலை தீர்த்து கொள்வதற்காகதான் 2007ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசுடன் மு.கா.இணைந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.

இணைந்தும் கொண்டது.

அந்த தேர்தலில் கட்சியினுடைய போராளிகள் வேட்பாளர்களினுடைய மன உளைச்சல்,
அவர்களது செலவீனம்,
அவர்களது நியாயப்படுத்துகை
என்பன எவ்வளவு கடினமான விடயங்கள்.
இவ்வாறு நடந்து கொண்டவருக்கெதிராக பின்னர் கட்சியினால் எந்த சட்ட நடவடிக்கையும் மேற் கொள்ளாதது மர்மமாகவே இருந்தது.

ஆனால் இன்று அந்த நபருக்கு கட்சியின் அந்தஸ்த்து பிரதி தலைவர் அதிகாரம் கிழக்கு முதலமைச்சர். இவை எதற்காக பரிமாறப்பட்டது?

அவருடைய அரவணைப்பில் இருந்த தாறுஸ்ஸலாம் இப்போது தலைவருடைய கைகளுக்கு மாறியதற்க்காக என்றால் தாருஸ்ஸலாம் வெற்றுக்கட்டிடமா?

கட்சி சின்னத்தை பறித்தவருடைய கட்சியின் செயலாளராக தனது மச்சானை தலைவர் ஹக்கீம் நியமித்ததற்காகவா?

அல்லது வேறு ஏதும் கொடுக்கல் வாங்கல்களா?

கட்சி சின்னம் களவு போனதோ!!! கொத்தி திங்க கழுகு வந்ததோ!!
இந்த பாடல் உங்கள் கட்சி கூட்டங்களில் ஒலிக்கப்படும் போது ஒருமுறை உங்கள் தலைவர்களிடம் விபரமறியுங்கள்.

இது யார் செய்த சதிக்காக உருவான பாடல்?

இன்று அவருக்கு கட்சி வழங்கியிருக்கும் அந்தஸ்த்து தொடர்பில் வினா எழுப்புங்கள் புரிய வரும்

இன்னும் வெறும் வெற்று அதிகார மயக்கங்கள்,பண பரிமாற்றங்கள் உங்கள் கண்ணை மறைத்தால் விடுதலைஎன்பதை நாம் எவ்வாறு உணர முடியும்.

Comments