மதுபோதையில் கூச்சலிட்டு கொண்டிருந்த பொலிஸ் பரிசோதகர் கைது!

நல்லதண்ணி பகுதிக்கு விசேட கடமைக்கு சென்றிருந்த பொலிஸ் பரிசோதகா் ஒருவா் மது அருந்திவிட்டு கடமை நேரத்தில் பொலிஸ் சீருடையுடன் நல்லதண்ணியில் இருந்து மஸ்கெலியாவுக்கு சென்று கூச்சலிட்டு கொண்டிருந்த போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

குறித்த பொலிஸ் பரிசோதகர் நேற்றிரவு 10 மணி அளவில் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட பொலிஸ் பரிசோதகா் அட்டன் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் சிவனொபாதமலை பருவ காலத்திற்காக விசேட கடமைக்காக சென்றுள்ளார்.

கடமையில் இருந்த குறித்த பொலிஸ் பரிசோதகா் நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் அனுமதி பெறாமலும் குறிப்பு புத்தகத்தில் தான் வெளியில் செல்வதாக குறிப்பினை பதிவு செய்யாமலும் வௌியேறியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்ட பொலிஸ் பரிசோதகா் இன்றைய தினம் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஐா்படுத்தப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments