தாருஸ்ஸலாம்; தர்க்கிப்பதற்கு எதுவும் இல்லை
(எம்.எம்.எம்.மிஹ்லார்)
கடந்த வாரம் முஸ்லிம் அரசியல் களத்தில் மிகவும் பரபரப்போடும் சுவாரஸ்யத்தோடும் பேசப்பட்டது நமது கட்சியின் தலைமைக் காரியாலயமான தாருஸ்ஸலாம் குறித்து நிலவிய அல்லது மறைக்கப்பட்ட மர்மங்கள் துலங்கப்படும் வகையில் வெளிவந்த “தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்”என்ற தலைப்பிலான நூலாகும். இது தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி என்ற கோஷத்தோடு வெளிப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு நூலை உண்மையான நூலாகப் பார்ப்பதாயின் நூலை எழுதியவரின் பெயர், முகவரி மற்றும் அதன் வெளியீட்டை உரிமை கோரும் முகவரியாவது தந்திருப்பது அவசியமானது. இந்த நியதி கூட புறக்கணிக்கப்பட்டு வெளிவருகின்ற நூல்கள், துண்டுப்பிரசுரங்கள் போன்ற எதுவானாலும் அவை ஒரு அநாமதேயமான வெளியீடாகவே கருதப்படுவது ஒரு பொது நியதி.
இப்படியான பலவீனங்களோடு “தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” என்ற நூல் வெளிவந்திருக்கிறது. இதற்காக வேண்டி அந்நூல் கொண்டிருக்கும் ஆவணங்களும் கருத்துக்களும் தரவுகளும் இலகுவாக எம்மால் தூக்கி எறியப்படக்கூடிவை அல்ல. ஏனெனில்,கூறவந்த கருத்துக்களை தக்கவியலாகவும் அதே நேரம் சான்றுகளோடும் நிறுவி எழுதப்பட்ட ஒரு நூலாக அது அமைந்திருக்கின்றது.
பேசியவர் யாரென்பது மறைக்கப்பட்டாலும் அதில் பேசப்பட்டிருக்கின்ற விடயங்கள் மறுக்கப்பட முடியாத உண்மைகளை வெளிப்படுத்தும் பாங்கினைப் பெற்றிருக்கின்றது. இங்கு, நமது மார்க்கத்தின் நியதியின் படி “சொல்பவனைக்கவனியாது சொன்னதை கவனி” என்கின்ற நடைமுறையை இங்கு நாம் கையாள வேண்டும். அது மாத்திரமன்றி இந்நூல் கொண்டிருக்கின்ற நமது முஸ்லிம் கட்சியின் முதன்மைக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகம் பற்றியதென்பதினால் நாம் ஊண்றி நோக்க வேண்டிய கட்டாயத்தை அடைகின்றோம். இது பின்வரும் இரண்டு காரணங்களினால் இன்னும் உன்னிப்பாக எம்மை நோக்க வைக்கின்றது.
01.தாருஸ்ஸலாம் என்பது தனி மனிதனின் சொத்து அல்ல. அது நமது சமூக கட்சியின் சொத்தாகும்.
02.தாருஸ்ஸலாத்தின் ஊடாக எய்தப்படுகின்ற எந்த நலன்களானாலும் அது நமது சமூகத்திற்கு பயன்பட வேண்டியது. இதுதவிர குறித்த சிலரின் ஜீவனோபாயமாக மாறிவிடக்கூடாது என்கின்ற அக்கறையுமாகும்.
இந்த நூல் வந்த விதத்தில் பலவீனங்கள் இருக்கின்றது என்பதற்காக வேண்டி உண்மைகளை உணர்ந்து கொள்ளாது நாம் மறுப்பது அல்லது அக்கறை காட்டாது விடுவது ஓர் அறிவுபூர்வமான இயங்கிகளுக்கு புறம்பானதென்பது தெளிவானது. இந்த நூல் கொண்டுள்ள தாருஸ்ஸலாம் பற்றிய மர்மங்கள் துலங்கப்படுவதும் விவாதிக்கப்படுவதும் அவசியமானதாகும் என்கின்ற மனநிலைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை கேள்விக்குட்படுத்தாது ஆதரித்துக்கொண்டிருக்கின்ற நமது மக்கள் மாறவேண்டும். இவ்வாறு திரும்புவதன் மூலம்தான் இந்நூலின் உள்ளடக்கம் வெற்றி பெற முடியும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு தமது வாக்குகளை செலுத்தாத வாக்காளர்களிடம் இந்த நூல் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துவதன் ஊடாக எந்த மாற்றங்களையும் நமது சமூகம் எய்த முடியாது என்பது உறுதியானது. உண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது வாக்குகளைச் செலுத்துகின்ற நமது புத்தி ஜீவிகளிடம் மற்றும் நடுநிலையாளார்களிடம் இந்நூல் கொண்டிருக்கும் உள்ளடக்கம் தாக்கம் செலுத்துகின்ற- பேசுகின்ற போதுதான் இதன் வெற்றி ஈடேறிக்கொள்ளும் என்று நாம் நம்பலாம்.
தாருஸ்ஸலாம் குறித்தான இந்நூல் வெளிவந்த அடுத்த கணமே நூலின் உள்ளடக்கம் பற்றி அக்கட்சியின் தலைவர் கவனம் செலுத்தாது எடுத்த எடுப்பில் ”இது எமது கட்சிக்குள் இருக்கின்றவர்களினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது” என்கின்ற கதையாடலோடு இதற்கு முடிவுகட்ட அவர் எத்தனிக்கின்றார். நமது கட்சியின் தலைவர் சொன்னால் அதில் எந்தவித கேள்விகளுக்கும் இடம் இராது என்கின்ற மனநிலையில் நமது மக்களும் ஆராய்ந்துபாராமல் அவரோடு ஒத்திசைபாடுவதற்கு தயாராகிவிடுகின்றனர். இதுதான் நமது தலைவர் ரஊப் ஹக்கீமின் பலமாகிவிடுகின்றது.
மறைக்கப்பட்டு வந்திருக்கின்ற ஒரு விடயம் குறித்து மௌனம் கலைக்கப் படுகின்ற ஒரு தருணம் அல்லது குறித்த நபர் ஏதாவது எதிர்பார்ப்பு சிதைவுறுகின்ற போது வெளிப்படுவதென்பது அன்றாடம் நாம் காணுகின்ற ஓர் உண்மை நிலையாகும். இது காழ்ப்புணர்வு, பழிதீர்த்தல், தரம் குறைத்தல் போன்ற குணாம்சத்தின் வெளிப்பாடு என்பதும் நாம் மறுக்க முடியாத பக்கம்தான் இந்த நியதிகளை நாம் ஏற்றுக்கொண்டு வெளிப்படுத்தப்படுகின்ற உண்மைகளை நாம் ஏற்பவர்களாகத்தான் இருந்து வருகின்றோம். ஏனெனில், உண்மைகள் வெளிப்படுகின்ற ரிஷிமூலத்தை தேடுவதை பார்க்கிலும் நிரூபிக்கப்படுகின்ற நிஜங்கள் தான் நமக்கு முக்கியமாகின்றது.
இதனை நாம் இன்னொரு எளிய உதாரணத்தின் ஊடாக பார்க்கலாம். ஒருவன் ஒரு கொலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம், இதனை இன்னும் ஒரு நபர் பார்க்கின்றார். அவன் அந்த சமயத்தில் கொலை குறித்து பேசவோ சாட்சியம் சொல்லவோ வரவில்லை. சிறிது காலம் சென்ற பின்னர் மேற்சுட்டிக்காட்டிய காரணங்களினாலோ அல்லது மன உறுத்தலின் அடிப்படையிலோ அவன் கண்ட கொலைக் காட்சியை சாட்சியப்படுத்த முன்வருகின்றான் என்றால் அந்த சாட்சியம் செல்லாது என்று நாம் புறக்கணிப்பதில்லை. இது போலதான் இந்நூல் வெளிவந்த விதத்தை நாம் நோக்க வேண்டும். அப்படிப்பார்க்கின்ற போதுதான் தாருஸ்ஸலாத்தின் மறைக்கப்பட்ட மர்மக்கதைகளின் நிஜ தரிசனங்க்கள் வெளிப்படும்.
தாருஸ்ஸலாத்தில் அப்படி என்னதான் மர்மம் இருக்கின்றது என்று பார்த்தால் அக்கட்டிடத்தின் உருவாக்கத்தின் பின்னால் இருந்து வந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படாது குறித்த சிலரின் முன்னேற்றங்களுக்கு பயன்பட்டிருக்கின்றது. உணமையில் அந்த பயன்பாடு என்பது நமது சமூகத்தை சென்றடைந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாது குறித்த சிலரின் ஏகபோகமாக அந்த நலன்கள் அனுபவிக்கப்பட்டு வந்திருக்கின்ற கதைகளைச் சொல்கின்றது.
அரசியல் அதிகாரத்துவத்தை தன்னகத்தே வைத்துக்கொள்வதற்கும் இந்த தாருஸ்ஸலாம் எப்படி உதவியது என்பதையும் அந்த நூல் அப்பட்டமாக முன்னிறுத்துகின்றது. கட்சிக்குரிய காணித்துண்டுகள் கூட கையகப்படுத்தி அடாத்தனமாக பிரயோகித்த காட்சிகளையும் இந்நூலில் தரிசிக்க கூடியதாக உள்ளது.
தாருஸ்ஸலாம் மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு உரித்தான சொத்துக்களை அனுபவிப்பவர்களாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பதவி நிலைக்குரியவர்கள் மாறியிருக்கின்றார்கள் என்பதை அப்பட்டமாக இந்நூல் வெளிப்படுத்தியதும் அது குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நற்பிட்டிமுனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் நமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உடைப்பதற்கு வெளிநாட்டு சக்திகளுடன் கை கோர்த்து செயல் படுகின்ற ஓர் அங்கம் என்ற பாணியில் வர்ணித்திருந்தார்.
தலைவர் ரஊப் ஹக்கீமின் புத்தள உரையும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் கருத்துரையும் இந்நூல் வெளிப்படுத்தியிருகின்ற உண்மைகளை கட்சியின் ஆதரவாளர்கள் சரியாக விளங்கிக்கொள்வதை தடுத்து வேறொரு திசையில் அவர்களின் கவனக்குவிப்பை திசை திருப்பும் சதியின் வெளிப்பாடோ? காலம் இதற்கு பதில் சொல்லும்.
இந்த நூல் வந்த விதத்தை வைத்து இந்நூலை நிராகரித்துவிட முனைவது முறையல்ல. உண்மையில் இந்நூலை மறுத்துக் கருத்துரைக்க முன்வரும் எந்த தரப்பானாலும் இந்நூல் கொண்டிருக்கும் தரவுகளையும் ஆவணங்களையும் பிழை என நிரூபிக்கும் வகையில் தமது வாதங்களையும் கருத்தாடல்களையும் முன்நிறுத்த வேண்டும்.
இவ்வாறான கோணத்தில் இந்நூல் பற்றி பேசுவதற்கு எந்த தரப்பாலும் அவ்வளவு எளிதாக முடிந்து விடும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், சட்டவலுவுடைய ஆவணங்களை முன் வைத்து அதற்குத்தேவையான சான்றாதாரங்களையும் தேவைக்கேற்ப குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றினை மறுத்துரைக்காத வரை இந்நூலின் உள்ளடக்கத்தை யாராலும் பொய்ப்பித்துவிட முடியாது என்பது திட்டவட்டமானது.

Comments
Post a Comment