முச்சக்கரவண்டி /வேன் போக்குவரத்தை தரமிக்கதாக்க மாற்ற புதிய திட்டம்!

முச்சக்கரவண்டிகள் மற்றும் பாடசாலை வேன் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து சேவையினை தரமிக்கதாக்க மாற்ற அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதனை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்காக இவரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து மற்றும் பாடசாலை வான் சேவையினை தரமிக்கதாக விருத்தி செய்வதற்காக கட்டுப்பாட்டு அதிகாரசபையொன்றை ஸ்தாபிப்பதற்கு 2017 -ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது.

குறித்த முன்மொழிவினை செயற்படுத்தும் வகையில் அது தொடர்பில் ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்க அமைச்சின் செயலாளர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments