மன்னாரில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது!


மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள கஞ்சாவுடன் அனுராதபுரத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வசம் இருந்து 3 கிலோ 650 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு,குறித்த சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Comments