மனைவியை கொன்று புதுவருடம் கொண்டாடிய கணவர்!

முழு உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மிக மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும் சில பிரதேசங்களில் சில கவலையடைவைக்கும் சம்பவங்களும் இடம்பெற்ற வண்ணமே நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில்,  அதுருகிரிய – பொரளுகொடபார பிரதேசத்தில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளம் பெண் சாப்பிட்டு கொண்டிருந்த போது அவரை அவரது கணவரே கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு ஒன்றின் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதுவருடத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பிரதேசமே அதிர்ச்சியில் மூழ்கிப்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments