திருமலை துறைமுகம் இந்தியாவுக்கு: சரத் பொன்சேகா

(ihzana fareed)

திருமலை துறைமுகத்தை இந்திய பராமரிப்பில் விடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நிலவி வருவதாக இந்திய செய்தி ஊடகம் ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளார் அமைச்சர் சரத் பொன்சேகா.

ஹம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரம் இன்னும் குழப்ப நிலையில் இருக்கின்ற அதேவேளை சீனாவுடனான கூட்டுறவு கடன் சுமையை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருமலை துறைமுகம் தொடர்பில் இந்தியாவே சிறந்த தெரிவெனவும் தெரிவித்துள்ளார்.

திருமலை துறைமுக விவகாரத்தில் பல தசாப்தங்களாக அமெரிக்கா அதீத அக்கறை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments