ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் ஆப்பாட்டம்
(ABDUL SALAM YASEEM)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் இன்று (21) மாலை 4.00 மணிக்கு கண்டன ஆப்பாட்டம் இடம்ப்பெற்றுள்ளது..
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தி வைரசாக பரவிய நிலையில் பெருமளவிலானேரர் இன்று திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு எதிரே அமைந்துள்ள திருவள்ளுவப்பெருமானின் சீலையின் முன்னே கூடீ ஆரப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சுலோகங்கள் அடங்கிய அட்டைகளையும் தாங்கியவர்களாக இவர்கள் காணப்பட்டுள்ளனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமிழ் மக்களின் கலை கலாசார பண்பாட;டு பாரமபரியங்களை எவராலும் அழித்துவிடமுடியாது எனவும் தெரிவித்துள்ளனர்
இதே வேனள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கல்முனை நகரிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம் பெற்றன.



Comments
Post a Comment