நியாயமற்ற முறையில் நடந்து கொள்ளும் பொலிஸார்!

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளின் போது சில தரப்பினருடன் பக்கச்சார்பான முறையில் பொலிஸார் நடந்துகொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார்.

சிலருக்கு பிணை வழங்கியும், சிலரின் விளக்கமறியலை நீடித்தும் பொலிஸார் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாக அவர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை நலம் விசாரிக்க தங்காளை சிறைச்சாலைக்கு சென்றிருந்த அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

அத்துடன் ஹம்பாந்தோட்டை மோதல் சம்பவத்தை ஆரம்பித்தவர்களுக்கு எதிராக முதலில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார்.

சம்பவம் தொடர்பில் 39 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments