மட்டக்களப்பில் இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை


மட்டக்களப்பில் நொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரு தினங்களாக காணாமால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

35 வயதுடைய சுஜிதா தவசீலன் என்ற இளம் குடும்பப் பெண்ணே காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று விட்டு, பஸ் நிலையத்தில் காத்திருந்த வேளையிலேயே இவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்த இவருடைய தொலைபேசி, வியாழக்கிழமை இரவு 8 மணிவரையில் இயங்கியதாகவும்குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Comments