போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!


யுத்தக் குற்றங்களை செய்தவர்கள் இருந்தார்களென்றால் பதவி தராதரம் பார்க்காது தண்டனை வழங்கப்பட வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டியில் மல்வத்து அஸ்கிரிய தேரரை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகில் திறமையான இராணுவமாக இருந்தாலும் இவ்வாறன சிலர் அதில் இருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து நுகேகொடயில் மஹிந்த நடத்திய பேரணி குறித்து கருத்து வெளியிட்டார்.

விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இந்த பேரணியில் உரையாற்றியமை தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.

“கருணா அம்மான் என்பவர் புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இயங்க முடியாமல் தப்பியோடியவர். விடுதலைப் புலிகளிடம் ஊழல் மோசடிகளில் சிக்கி, பிரபாகரனின் உயிரை காப்பாற்றுவதாக கூறி தப்பி வந்த மனிதனாவார்.

பிரபாகரனுடன் ஒன்றாக வாழ்ந்த நபர் என்பதற்கு, அவர் பிரபாகரனின் வீடு இருந்த இடத்தையேனும் கூறவில்லை.

எங்கள் இராணுவத்தினர் தான் புதுக்குடியிருப்பில் வீட்டை கண்டுபிடித்தார்கள். அவரை வீரனாக்கியது மஹிந்த ராஜபக்ச தான்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments