திருகோணமலை கந்தளாயில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல்
(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் சேருவில தேர்தல் தொகுதியை மையப்படுத்தி கந்தளாய், முள்ளிப்பொத்தானை,சேருவில,தம்பலகமம் பிரதேசத்தில்
முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்று திங்கட்கிழமை (9) கந்தளாய் பேராறு பிரதேசத்தில் உள்ள தௌபீக் தக்கியா பள்ளிவாயலில் கந்தளாய் பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் என்.எம்.கே.சுபார்கான் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதியை எவ்வாறு தெரிவு செய்வதுபற்றி கலந்துரையாடப்பட்டதோடு,கந்தளாய் மக்கள் ஏன் கிண்ணியா பிரதிநிதிக்கே,அல்லது மூதூர் பிரதிநிதிக்கோ வாக்களிக்க வேண்டும்,இது வரை காலமும் கந்தளாய் மக்களும் கந்தளாய் மண்ணும் கண்ட பிரதிபலன் என்ன?இனி வருகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் வாக்களிப்பதென்றால் நமது பிரதேசம் சார்ந்த ஒருவராகவே இருக்க வேண்டும் என்பதோடு இவ்விடயத்தினை பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதில் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும், போன்ற விடயங்கள் தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு இவ்விடயம் பற்றி பொதுக்கூட்டங்களை நடாத்துதல்,மற்றும் தம்பலகமம், முள்ளிப்பொத்தானை போன்ற பிரதேச அரசியல் ஆர்வலர்களின் கருத்துகளை பெற்றுக்கொள்ளல் போன்ற விடயங்களை இதன் போது கலந்தாலோசிக்கப்பட்டது.
அத்தோடு கந்தளாய் முன்னால் பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.கே சுபார்கான் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவொன்றும் இதன் போது தெரிவு செய்யப்பட்டது. அத்தோடு அத்தோர்தலின் போது ஏதாவது கட்சியில் இணைந்து களமிறங்குவதா,அல்லது தனித்து போட்டியிடுவதா போன்ற தீர்மானங்கள் பின்பு அறிவிக்கப்படுவதோடு,இம்மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல்களின் போது தற்போது இருக்கின்ற அல்லது முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்தவிதமான தடைகளும் இல்லையெனவும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கந்தளாய் பிரதேச முன்னால் மூன்று முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்களான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.முதார்,ஜெஸில் மௌலவி,மற்றும் சுபார்கான் உட்பட கந்தளாய் அரசியல் ஆர்வலர்கள், இணைப்பாளர்கள்,பள்ளிவாயல் சமாஜத் தலைவர்,மௌலவிமார்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.





Comments
Post a Comment