பொலிஸார் மீது நாமல் குற்றச்சாட்டு!



பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து தெளிவான சாட்சியங்கள் உள்ள நிலையிலும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை பொலிஸார் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் உள்ளிட்டகுழுவினர் மீது குற்றம்சாட்டிய போதும், அரசாங்கத்திற்கு எதனையும் நிரூபிக்க முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தில் தவறிழைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டவேளை அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Comments