CTB பஸ் மீது கல் வீச்சு தாக்குதல்

(இஹ்ஸானா பரித்)

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ் மீது நேற்றிரவு (15) 8.20 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை டிப்போவிற்கு சொந்தமான WP NB-8599 எனும் இலக்கமுடைய பஸ் பிற்பகல் 4.00மணியளவில் திருமலை,புல்மோட்டை,முல்லைதீவு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வழியிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பஸ்ஸின் முன் கண்ணாடி சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் மற்றுமொரு பஸ்ஸில் அனுப்பி வைக்கப்ட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

திருகோணமலை டிப்போவிற்கு சொந்தமான பஸ்கள் மீது 03 தடவைகளுக்கு மேலாக தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதாகவும் டிப்போ உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

கல்வீச்சு தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

Comments