VW விவகாரத்தை என்னிடம் கேட்டிருக்கலாம்: ரணில்
வொக்ஸ்வகன் தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குறித்த ஜேர்மன் நிறுவனம் முதலிடவில்லையெனும் உண்மையைத் தன்னைக் கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன் என தெரிவித்துள்ளார்.
தன்னிடம் வினவுவதைவிடுத்து ஜேர்மனி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டதாக தனியார் ஊடகங்கள் செய்யும் பிரச்சாரங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள பிரதமர் குறித்த நிறுவனம் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதால் அந்நிறுவனத்தை இலங்கையில் முதலிட ‘அனுமதிக்கவில்லையென’ விளக்கமளித்துள்ளார்.
எனினும், டிசம்பர் மாதம் வரை பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தமை குறித்து ஹர்ஷ டி சில்வா ஏலவே தகவல் வெளியிட்டுள்ளதோடு தொழிற்சாலை திறப்பு விழாவின் போது அரசாங்கம் அப்பெயரை உபயோகிக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
சர்ச்சையின் பின்னரே தற்போது வொக்ஸ்வகன் நிறுவனத்துக்கும் கடந்த 3ம் திகதி குளியாபிட்டியவில் திறக்கப்பட்ட தொழிற்சாலைக்கும் தொடர்பில்லையென அரச தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளமையும் திறப்பு விழாவில் பிரதமர் மற்றும் ஜனாதிபதியும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment