கிண்ணியா – மூதூர்: 04 அரை கிலோ கேரளா கஞ்சா சிக்கியது
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கன்டலடியூற்று பகுதியில் 4 1/2 கிலோ கிரேம் கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் இன்று (18) இரவு 7.00மணியளவில்
கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நச்சுத்தன்மையான போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளைச்சேர்ந்த 24 -29 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும் தெரிவித்தனர்.
கன்டலடியூற்று பிரதேசத்தில் விற்பணைக்காக கேரளா கஞ்சாவை கொண்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனைகளை மேற்கொண்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்களை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட நச்சுத்தன்மையான போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.


Comments
Post a Comment