மஹிந்தவைச் சுற்றி 196 ஆலோசகர்கள்; 90 மில்லியன் செலவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைகச் சுற்றி 196 பேர் ஆலோசகர்களாகக் கடமையாற்றியதாகவும் அதனால் மாதாந்தம் 90 மில்லியன் ரூபா அரசாங்கம் செலவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா.
ஆனாலும் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நான்கு ஆலோசகர்களே இருப்பதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல 75க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து சம்பளம் வழங்குவதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment