2017-ம் ஆண்டு சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!


2017-ம் ஆண்டு பரீட்சையில் தோற்றவுள்ள சாதாரண தர பரீட்சாத்திகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான சுற்று நிரூபம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிலையில் பரீட்சாத்திகள் தற்போதிருந்தே விண்ணப்பங்களை அனுப்பி விரைவாக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அடையாள அட்டை தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 31-ம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments